போடி: போடி அருகே சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு மணியம்பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.
எரியாத தெருவிளக்கு, சாக்கடை கழிவுநீர் தேக்கம், அகற்றப்படாத குப்பையால் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி ஒன்றியம் சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். சிலமலை 2 வது வார்டு மெயின் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் வாகனங்களில் செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. வளாகம் பகலில் குப்பைகொட்டும் பகுதியாகவும், இரவு நேரங்களில் மதுஅருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளன. தெருக்களில் சில மின்கம்பங்களில் விளக்கு வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளன.ரோட்டை சீரமைப்பதோடு தெருக்களை சுகாதாரமாக மாற்றி அமைக்க சிலமலை ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.அவர்கள் கூறியதாவது:கொசுத்தொல்லைசி.கண்ணன் : சிலமலை 2 வது வார்டு மெயின் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது. கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். தெருக்களில் சாக்கடை துார்வாராததால் கழிவுநீர் முழுவதும் வீடுகளுக்கு முன் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்து சுகாதாரகேடு ஏற்படுகிறது. வீட்டு இணைப்புகளுக்கானகுடிநீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. இதனால் தெரு பொது குடிநீர்குழாய் அமைந்துள்ள பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலையில் மக்கள் தவிக்கின்றனர். வீணாகும் குடிநீர் சி.சுரேஷ் : தெருக்களில் உள்ள பல பொதுக்குடிநீர் குழாய்களில் திருகுகோல் சேதமடைந்துள்ளதால் குடிநீர் கசிவு ஏற்பட்டு வீணாக ரோட்டில் செல்கிறது. நான்காவது தெருவில் மின்கம்பத்தில் பல மாதங்களாக விளக்கு எரியாததால் இரவில் இருளில் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். குப்பை தொட்டிகள் இருந்தும் ஊராட்சி நிர்வாகம் முறையாக பயன்படுத்தாத நிலையில் சிலமலை -- மணியம்பட்டி செல்லும் ரோட்டில் குப்பை தேங்கி கிடக்கிறது. மூன்று நாட்களுக்கு ஒரு முறை அள்ளுவதால் குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் பாதிக்கின்றனர். தெருவிளக்குகளை சீரமைக்கவும், குப்பை தேங்காமல் இருக்கவும், ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE