திருப்பூர்:திருப்பூரில் நாளை ஸ்டாலின் பங்கேற்கும், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.தமிழகம் முழுதும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை (21ம் தேதி) திருப்பூர் - காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுபுதுாரில் திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட நான்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மனுக்கள் பெறவுள்ளார்.'இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை எழுத்துபூர்வமாக ஸ்டாலினிடம் வழங்கலாம்; கட்சியினர் பெருமளவு திரண்டு வர வேண்டும்' என மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.நாளை காலை 8:00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொகுதிக்குட்பட்ட கட்சியினர் பங்கேற்கவுள்ளனர்.நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தில் பிரமாண்டமான மேடையும், பார்வையாளர்கள் அமர பந்தலும் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE