மஹாராஷ்டிராவில் ஊழல் மூன்று சகோதரர்கள் கைது| Dinamalar

மஹாராஷ்டிராவில் ஊழல் மூன்று சகோதரர்கள் கைது

Added : பிப் 20, 2021
Share
மும்பை:மஹாராஷ்டிராவில், பொது வினியோக திட்டத்தில் ஊழல் செய்த மூன்று சகோதரர்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துஉள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல், நாக்பூரை சேர்ந்த, சம்பத் நாம்தேவ் கோர்பாதே, அருண் நாம்தேவ் கோர்பாதே மற்றும் விஷ்வாஸ் நாம்தேவ்

மும்பை:மஹாராஷ்டிராவில், பொது வினியோக திட்டத்தில் ஊழல் செய்த மூன்று சகோதரர்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துஉள்ளனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015ல், நாக்பூரை சேர்ந்த, சம்பத் நாம்தேவ் கோர்பாதே, அருண் நாம்தேவ் கோர்பாதே மற்றும் விஷ்வாஸ் நாம்தேவ் கோர்பாதே என்ற மூன்று சகோதரர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்கள் மூவரும், அரசு கிடங்குகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை வாங்கி, அதை நேரடியாக அரிசி ஆலைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மோசடி செய்தது, போலி ஆவணங்களை உருவாக்கியது, சதி திட்டங்கள் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன.

இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், அந்த மூன்று சகோதரர்களையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள், 177 கோடி ரூபாய் அளவிற்கு, பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X