ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதில் சிக்கல்முந்தைய நிலை தொடர பரிந்துரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதில் சிக்கல்முந்தைய நிலை தொடர பரிந்துரை

Added : பிப் 20, 2021
Share
கம்பம் ; சட்டசபை தேர்தலில் 1050 ஓட்டுகளுக்கு மேல் உள்ள சாவடிகளை இரண்டாக பிரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், பழைய நிலை தொடர அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கொரோனா வழிகாட்டுநெறிமுறைகளின் படி 1050 ஓட்டுகளுக்கு மேல் உள்ள் ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கம்பம்

கம்பம் ; சட்டசபை தேர்தலில் 1050 ஓட்டுகளுக்கு மேல் உள்ள சாவடிகளை இரண்டாக பிரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், பழைய நிலை தொடர அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். கொரோனா வழிகாட்டுநெறிமுறைகளின் படி 1050 ஓட்டுகளுக்கு மேல் உள்ள் ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கம்பம் தொகுதியில் 297, போடி 314, பெரியகுளம் 296, ஆண்டிபட்டி 313 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இது கடந்த லோக்சபா தேர்தலின்போது அமைக்கப்பட்டது. தற்போது ஓட்டுச்சாவடிகளை பிரிப்பதற்கான ஆய்வு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு பிரச்னைகள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முடிந்தஅளவு அதே வளாகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு இடங்களுக்கு மாற்றும் போது, புதிதாக மின்வசதி, குடிநீர் வசதி, பர்னிச்சர், கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும். எனவே பிரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அவ்வாறு பிரிக்கும்பட்சத்தில் 40 சதவீத ஓட்டுச்சாவடிகள் அதிகமாகும் என்றும், அதற்கு ஏற்ப பணியாளர்களும் தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X