கம்பம் - கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் ஜெகன் 21, ராமநாதபுரம் சபரிவிக்னேஷ் 23, இருவரையும் 3 கிலோ கஞ்சாவுடன் ஜன. 21 ல் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். ஜெகன் குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்குகள் இருப்பதால், ஜெகனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய தேனி சாய்சரண்தேஜஸ்வி,. எஸ்.பி.. , கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் ஜெகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது உத்தரவை கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE