பொது செய்தி

தமிழ்நாடு

நுால்கள் வாசிப்பு...

Added : பிப் 20, 2021
Share
Advertisement
தமிழ் மொழியை தடையின்றி வாசிக்க நுாலகங்கள் சேவை புரிந்து வருகின்றன. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தமிழ் மொழி மட்டுமில்லாமல், ஆங்கிலத்தையும் சரளமாக வாசிக்க வேண்டுமானால், தினமும் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் அவசியம்.இதற்கு, நுாலகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும், கதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு, நுாலகம் சென்று, பல்வேறு கதை
 நுால்கள் வாசிப்பு...

தமிழ் மொழியை தடையின்றி வாசிக்க நுாலகங்கள் சேவை புரிந்து வருகின்றன. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பும் சரி, தற்போதும் சரி, தமிழ் மொழி மட்டுமில்லாமல், ஆங்கிலத்தையும் சரளமாக வாசிக்க வேண்டுமானால், தினமும் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் அவசியம்.இதற்கு, நுாலகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும், கதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு, நுாலகம் சென்று, பல்வேறு கதை புத்தகங்கள், பழைய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி துணுக்குகளை படித்து உள்வாங்கினால் போதும். பள்ளிகளில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற, மாணவ, மாணவியர்களுக்கு நுாலகம் துணை நின்றுள்ளது என்றால் மிகையாகாது.நுாலகத்தில், கதை புத்தகங்கள், சிறுவர், சிறுமியர்களுக்கான புத்தகங்கள், அறிவு சார்ந்த புத்தகங்கள், மாற்று மொழியை கற்றுக் கொள்ளும் புத்தகங்கள், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கான அறிவியல் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.இதுமட்டுமின்றி, தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றவைகளும் உள்ளதால், மாணவ, மாணவியர்களுக்கும் சரி, முதியவர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள் என்ற பாரபட்சம் இன்றி அனைவரும் நுாலகத்திற்கு சென்று, அறிவை வளர்த்து வருகின்றனர். புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்க அமைதியான இடம் தேவை. அதற்கு நுாலகம் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது. தினமும் வாசிக்க, வாசிக்க, மாணவர்களின் மனதில் அறிவுத்திறன் ஆழமாக பதிவாகிறது.இன்று, மொபைல்போனிலேயே தேவையான புத்தகங்கள், அறிவுசார்ந்த விஷயங்கள் அதிகமாக கிடைத்தாலும், தொடர்ந்து படிக்க முடியாது. பல்வேறு இடர்பாடுகளால் மொபைல்போனில் தொடர்ந்து படிக்க முடியாமல் போகிறது.தேவைப்படும் விஷயங்களை தேடுதலால் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணம், அறிவை மெருகேற்ற முடியாத சூழலை உருவாக்குகிறது. எந்த காலமாக இருந்தாலும், அறிவை வளர்க்க புத்தகங்களை வாசிப்பதற்கு நுாலகம் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது.இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர்கள் அதிகளவில் மொபைல்போனை பயன்படுத்தாமல், நுாலகத்திற்கு சென்று படிக்க வேண்டும். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நுாலகத்தில் அமர்ந்து படிக்க அனுமதியில்லை.ஆனால், வாசகராக சேர்ந்து, புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கலாம். விரைவில், நுாலகத்தில் அமர்ந்து படிக்க அரசு உத்தரவிடும். அதுவரையிலும், அறிவுத்திறனை பட்டைதீட்ட தினமும் புத்தகங்களை படிக்க வேண்டும். அதற்கு, உறுதியேற்றால், நீங்களும் நாளைய தலைவர்களே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X