பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைந்தும் ஏலக்காய் விலையில் கடும் சரிவு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கம்பம் - இ-- ஆக்சன் மையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைவாக இருந்தும், விலையில் கடும் சரிவு ஏற்படுவதால் விவசாயிகளை அவதிப்பட வைத்துள்ளது.கேரளா, இடுக்கியில் கன மழை, வெயில், பனி என மாறி, மாறி சீதோஷ்ணநிலை நிலவுகிறது. ஏலத் தோட்டங்களில் காய் எடுப்பு முடிந்து, பராமரிப்பு பணிகள் நடக்கிறது. கிணறுகளில் இருந்து தண்ணீர் அடிக்க துவங்கியுள்ளனர். ஏல ஆக்சன் மையங்களில், காய் வரத்து

கம்பம் - இ-- ஆக்சன் மையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைவாக இருந்தும், விலையில் கடும் சரிவு ஏற்படுவதால் விவசாயிகளை அவதிப்பட வைத்துள்ளது.கேரளா, இடுக்கியில் கன மழை, வெயில், பனி என மாறி, மாறி சீதோஷ்ணநிலை நிலவுகிறது. ஏலத் தோட்டங்களில் காய் எடுப்பு முடிந்து, பராமரிப்பு பணிகள் நடக்கிறது. கிணறுகளில் இருந்து தண்ணீர் அடிக்க துவங்கியுள்ளனர். ஏல ஆக்சன் மையங்களில், காய் வரத்து குறைந்து வருகிறது. ஒரு நாளைக்கு காலை, பிற்கபல் நடைபெறும் 2 ஏலங்களிலும் அதிகபட்சம் 50,000 கிலோ பதிவாகிறது.ஏல மையத்தின் நிர்வாகி கூறுகையில், ஏலக்காய் வர்த்தகத்தில் வாரத்தின் ஏழு நாட்களும்ஒரு நாளுக்கு காலை, மாலை என 2நிறுவனங்கள் வர்த்தகம் நடத்துகிறது. மொத்தம் 12 நிறுவனங்கள் உள்ளன. தற்போது சீசன் முடிந்து, காய் வரத்து குறைவாக உள்ளது. ஒரு ஆக்சனுக்கு 30 ஆயிரம் கிலோ வருகிறது. இந்நிலையில் விலை மளமளவென சரிய துவங்கியுள்ளது. சராசரி விலை கிலோவிற்கு ரூ. 1500 முதல் ரூ.1600 வரை கிடைத்தது. பிப். 18 ல் கிலோ ரூ. 1294 க்கு குறைந்தது. விலை குறைவு விவசாயிகளை அவதிப்பட வைத்துள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X