பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான கால்வாய் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை: அரசு கவனம் செலுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
உடுமலை:பி.ஏ.பி., திட்டத்தில், பாசனத்திற்கு நீர் வினியோக ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாய் பராமரிப்பு பணிக்கும் நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கிருந்து, 124 கி.மீ.,

உடுமலை:பி.ஏ.பி., திட்டத்தில், பாசனத்திற்கு நீர் வினியோக ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாய் பராமரிப்பு பணிக்கும் நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நான்கு மண்டலமாக பிரித்து, பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கிருந்து, 124 கி.மீ., துாரம் உள்ள பிரதான கால்வாய் வழியாக, இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.பாசன ஆதாரமாக உள்ள, பிரதான கால்வாயிலும் பல இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. கரைகள் வலுவிழந்து காணப்படுவதால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் இழப்பும் அதிகரித்து, விவசாயிகளுக்கு போதிய அளவு நீர் கிடைப்பதில்லை.அதிலும், திருமூர்த்தி அணையிலிருந்து 1.6 கி.மீ., துாரத்திலிருந்து, 7.1 கி.மீ., துாரம் வரை, 6.5 கி.மீ., துாரம் கால்வாய் பகுதியில், கரிசல் மண் காரணமாக, இரு புறமும் கரை பாதிக்கப்பட்டு, அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.உடுமலை கால்வாய் பிரியும் பகுதி முதல், தீபாலபட்டி கருப்பராயன் கோவில் வரை, கரிசல் மண்ணாக உள்ளதால், கால்வாய் கரைக்கு 'சிலாப்' ஒட்டினாலும், கான்கிரீட் அமைத்தாலும், மண் இளகி, சரிவு ஏற்படுகிறது.தண்ணீர் திறந்து விடும்போது, அபரிமிதமான நீர்க்கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல், நெகமம் பகுதியில், ஒரு கி.மீ., நீளத்தில், பிரதான கால்வாய் சேதமடைந்துள்ளது.இதற்கான தொழில் நுட்ப வல்லுனர் குழு அமைத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பிரதான கால்வாயை புதுப்பிக்க, 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு, பிரதான கால்வாய் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்படும், என அரசு அறிவித்தது. ஆனால், காண்டூர் கால்வாய் புதுபிக்க, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அரசு, பாசனத்திற்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய் புதுப்பிக்க தேவையான நிதி ஒதுக்கவில்லை.பி.ஏ.பி., விவசாயிகள் கூறியதாவது :பி.ஏ.பி., திட்டத்தில், பிரதான கால்வாயில் அதிகளவு நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால், பாசன நிலங்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைப்பதில்லை. இரு ஆண்டுக்கு ஒரு முறை நீர் வழங்கும் நிலையில், திடீர் உடைப்பு ஏற்பட்டால், சாகுபடி செய்த பயிர்கள் அனைத்து காய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கியது போல், நீர் வினியோக கட்டமைப்பான பிரதான கால்வாயை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கி, இரு பணிகளையும் ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X