தேனி: தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவிபல்தேவ் சட்டசபை தேர்தல் காரணமாக, மாநில நில நிர்வாகப்பிரிவு கூடுதல் ஆணையாளராக மாற்றப்பட்டார். சென்னையில் நிதித்துறை இணைச் செயலாளராக பணியில் இருந்த ஹெச்.கிருஷ்ணன்உண்ணி தேனி மாவட்ட கலெக்டராக நியமித்து அரசின் முதன்மை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் உத்தரவிட்டுள்ளர்.இவர் 2005-- 2009 வரை திருவனந்தபுரம் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் பி.டெக்., பட்டம் பெற்று, உத்ராஞ்சல் மாநிலம் முசோரி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் செப்., 2012 முதல் ஜூன் 2013 வரை (10 மாதம்) பயிற்சி முடித்தார். 2014 செப்., முதல் 2017 பிப்., வரை கோபிச்செட்டிபாளையம் சப்-- கலெக்டராக இருந்தார். அதன் பின் 2017 பிப் முதல் 2020 வரை நிதித்துறை துணைச் செயலாளராகவும். 2020 ஏப்., முதல் தற்போது வரை நிதித்துறை இணைச் செயலாளராக பணிபுரிந்தார். தற்போது தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹார்வார்டு பிஸ்னஸ் ஸ்கூலில் நிதித்துறை வணிகம், சர்வதேச பொதுத்துறை நிதிநிர்வாக மேலாண்மை படிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE