உடுமலை:என்.சி.சி., மாணவியருக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வில், 57 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தேசிய மாணவர் படை மாணவியருக்கான 'ஏ' சான்றிதழ் தேர்வு, உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பட்டாலியன் பெண்கள் பிரிவைச் சேர்ந்த கமாண்டர் கர்னல் சதீஷ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் திலகாம்பாள், தேர்வை துவக்கி வைத்தார்.இதில், அணி நடைப்பயிற்சி, தேசிய மாணவர் படை அமைப்பு, வரைபடம் வாசித்தல், தரைப்படை பயிற்சி, துப்பாக்கி சுடுதல், கையாளுதல் மற்றும் உதிரிபாகங்கள் பற்றிய விளக்கம், தற்காப்பு கலை மற்றும் பேரிடர் மேலாண்மை, தலைமைப் பண்புகள், சமூகப்பணி முப்படைகளைப் பற்றி அறிதல் உள்ளிட்ட பாடங்களில், செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மாணவியருக்கு நடத்தப்பட்டன.மொத்தம், 57 என்.சி.சி., மாணவியர் தேர்வில் பங்கேற்றனர். சுபேதார் மேஜர் நரேஷ்குமார், ஹவில்தார் பிஜூவர்க்கீஸ், நாயக்சுதாகர் ஆகியோர் அடங்கிய குழுவினரால், தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, என்.சி.சி., முதன்மை அலுவலர் நர்மதா செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE