வன உரிமைக்குழு கூட்டம் நடத்த அலட்சியம்: மலைவாழ் மக்கள் அதிருப்தி

Added : பிப் 20, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், கோட்ட அளவிலான வன உரிமை கூட்டத்தை, அதிகாரிகள் திடீரென ரத்து செய்ததால், மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதியில், 15க்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வன உரிமைச்சட்டப்படி, இம்மக்களுக்கு, விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு நிலப்பட்டா,

உடுமலை:உடுமலையில், கோட்ட அளவிலான வன உரிமை கூட்டத்தை, அதிகாரிகள் திடீரென ரத்து செய்ததால், மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதியில், 15க்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வன உரிமைச்சட்டப்படி, இம்மக்களுக்கு, விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தராமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், மூன்று ஆண்டுக்கு முன், அனுபவநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள், வரைபடம்உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது.வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் மலைவாழ் மக்களைக்கொண்ட, கோட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு, பின், மாவட்ட அளவிலான கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.ஆனால், இக்குழு கூட்டம் நடத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்காட்டி வரும் நிலையில், நேற்றுமுன்தினம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பதாக இருந்த, வன உரிமைக்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர்கள் குப்புசாமி, மணியன், செயலாளர் செல்வன் கூறுகையில், 'வன உரிமைக்குழு கூட்ட தீர்மானம் அடிப்படையிலேயே, நிலப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியும். ஆனால், அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளதால், உடனடியாக கோட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், வரும் தேர்தலை மலைவாழ் மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X