பொள்ளாச்சி:தேங்காய் சீசன் துவங்கிய நிலையில், நேற்று கொப்பரை கிலோ, 136.50 ரூபாயாக உயர்ந்தது.தமிழகத்தில், தேங்காய் சீசன் முன் கூட்டியே துவங்கிய நிலையில், தேங்காய் விலை சரியாததால், வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. கொப்பரை உற்பத்தி பணியில் இருந்த வெளியூர் ஆட்கள், சொந்த ஊருக்கு சென்று விட்டனர். கொப்பரை விலையும் சரிவில் இருந்த காரணத்தால், உற்பத்தி களங்கள் முடங்கின.இருப்பினும், பச்சை தேங்காய் டன்னுக்கு, 39 ஆயிரம் ரூபாய், கருப்பு ரக தேங்காய், 46 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சமீப நாட்களாக, 10 சதவீதம் கொப்பரை உற்பத்தியாகிறது. கொப்பரை பற்றாக்குறை காரணமாக, காங்கேயம் மார்க்கெட்டில், திடீரென விலை உயர துவங்கியுள்ளது.நேற்றைய கொப்பரை மார்க்கெட் நிலவரப்படி, ஸ்பெஷல் கொப்பரை கிலோ, 136.50 ரூபாய், சாதாரண கொப்பரை கிலோ, 133 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்தாண்டு துவக்கத்தில் கொப்பரை விலை, 130 ரூபாயாக இருந்தது. முன் கூட்டியே தேங்காய் சீசன் துவங்கியதால், திடீரென கொப்பரை கிலோ, 120 ரூபாயாக சரிந்தது.தொடர்ந்து சில வாரங்கள் இதே விலை நீடித்த நிலையில், நேற்று கொப்பரை விலை, 136.50 ரூபாயாக உயர்ந்துள்ளது திருப்தி அளிப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE