பொது செய்தி

தமிழ்நாடு

மல்லி வரத்து அதிகரிப்பு: குறைந்து வரும் விலை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
உடுமலை:மல்லி வரத்து அதிகரித்து வருவதால், கிலோ, 1,000 ரூபாய் அளவில் விலை குறைந்துள்ளது.உடுமலை பூ மார்க்கெட்டிற்கு, சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், வழக்கமாக, ஒரு டன் அளவில் மல்லி தருவிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக, பனியின் காரணமாக, மல்லி விளைச்சல் குறைந்தது. வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து, கிலோ, 2,000முதல், 4,000 ஆயிரம் ரூபாய்க்கு
 மல்லி வரத்து அதிகரிப்பு: குறைந்து வரும் விலை

உடுமலை:மல்லி வரத்து அதிகரித்து வருவதால், கிலோ, 1,000 ரூபாய் அளவில் விலை குறைந்துள்ளது.உடுமலை பூ மார்க்கெட்டிற்கு, சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், வழக்கமாக, ஒரு டன் அளவில் மல்லி தருவிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக, பனியின் காரணமாக, மல்லி விளைச்சல் குறைந்தது. வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து, கிலோ, 2,000முதல், 4,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.தற்போது, பனியின் தாக்கம் குறைந்துள்ளதால், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மல்லி உற்பத்தி அதிகரித்து, அதன் விலை, ஆயிரம் ரூபாய்க்கு சரிந்துள்ளது.இது குறித்து வியாபாரி, குமார் கூறுகையில், ''மல்லி வரத்து அதிகரித்து, இதன் விலையில் சரிவு ஏற்பட்டு, நேற்று, கிலோ, ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அவ்வகையில், கடந்த ஒரு வாரத்தில், ஆயிரம் ரூபாய் அளவில் விலை குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மல்லியின் விளைச்சல் அதிகரிப்பதுடன் தரமானதாகவும் இருக்கும். அதன் விலை மேலும் குறையும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X