பொது செய்தி

தமிழ்நாடு

பிரையன்ட் பூங்காவில் 2ம் கட்ட நடவு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கொடைக்கானல்: - கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட குறுமலர் செடிகள் நடவு பணி துவங்கியது.மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் கடந்த மாதம் முதல் கட்ட மலர் நாற்று நடவு நடந்தன. தற்போது பேன்சி, மேரிகோல்டு, ஆஸ்கர், சின்யா, செலோசியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் படுகைகளில் நடவு செய்யப்பட்டன. இவை 3 மாத காலத்தில் முழுவீச்சில் பூத்து பூங்காவை அழகுறச்

கொடைக்கானல்: - கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட குறுமலர் செடிகள் நடவு பணி துவங்கியது.மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் கடந்த மாதம் முதல் கட்ட மலர் நாற்று நடவு நடந்தன. தற்போது பேன்சி, மேரிகோல்டு, ஆஸ்கர், சின்யா, செலோசியா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலர்ச்செடிகள் படுகைகளில் நடவு செய்யப்பட்டன. இவை 3 மாத காலத்தில் முழுவீச்சில் பூத்து பூங்காவை அழகுறச் செய்யும். நடவு பணிகளை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி பார்வையிட்டனர்.துணை இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், ''இதுவரை பூங்காவில் 750 மலர் படுகைகள் இருந்தன. இதை விரிவாக்கம் செய்து ஆயிரத்து 100 மலர் படுகைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்படுகின்றன. சீசனின் போது பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X