செம்பட்டி: அரசியல் கட்சிகளின் பலம் தொடர்பாக பல தனியார் அமைப்புகள் சர்வே பணியில் களமிறங்கியுள்ளன. தேசிய, மாநில கட்சிகள், பதிவு பெறாத சமூக அமைப்புகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையிலும், உள்ளூர் அரசியல் களைகட்டத் துவங்கியுள்ளன.சமூக வலைதள பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களின் நாடி பிடித்துப் பார்க்கும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. ஊடகங்கள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் அமைப்புகளும், 'சர்வே' யை துவங்கியுள்ளன. ஆத்துார் தொகுதியில் 'எலக் ஷன் 360, ராஜாளி உட்பட பல அமைப்புகளின் நடமாட்டம் சில நாட்களாக உள்ளது.ஓட்டளிக்க விரும்பும் எந்தக் கட்சியை ஆதரிப்பது, அதற்கான காரணங்கள் சேகரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த மனநிலை, பொருளாதார நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு தொடர்பான கருத்துகள், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு, உள்ளூர் பிரச்னைகளால் நிலவும் சூழல், தொகுதியில் நிறைவேற்றப்பட்ட புதிய திட்டங்கள், தீர்வு காணப்படாத பிரச்னைகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.வி.ஐ.பி.,க்கள் தொகுதியில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் முன்னாள், தற்போதைய அமைச்சர்கள், எம்.பி.,க்களுக்காக எதிர்பார்க்கப்படும் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE