பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் - கொடைரோடு டவுன் பஸ்கள் குறைப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கொடைரோடு: டோல்கேட் செலவை தவிர்ப்பதற்காக திண்டுக்கல் - கொடைரோடு இடையே அரசு டவுன் பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது.சின்னாளபட்டி வழியே கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. நான்கு வழிச்சாலையால் கொடை ரோட்டுக்குள் புறநகர் பஸ்கள் பலவும் வருவதில்லை.கிராமப்புற மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் இந்த டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர்.

கொடைரோடு: டோல்கேட் செலவை தவிர்ப்பதற்காக திண்டுக்கல் - கொடைரோடு இடையே அரசு டவுன் பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது.சின்னாளபட்டி வழியே கொடைரோடு, சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. நான்கு வழிச்சாலையால் கொடை ரோட்டுக்குள் புறநகர் பஸ்கள் பலவும் வருவதில்லை.கிராமப்புற மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் இந்த டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் பஸ் சேவை மீண்டும் துவங்கியது.இந்நிலையில் தற்போது டோல்கேட் கட்டண சிக்கன நடவடிக்கையாக, சிலுக்குவார்பட்டி செல்லும் இரு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு பஸ் சின்னாளபட்டியுடன் திண்டுக்கல்லுக்கு திரும்பிவிடுகிறது. இதனால் காலை நேரத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள் கிடைத்த சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் அபாயகரமாக பயணிக்கின்றனர். எனவே டவுன்பஸ் சேவையை குறைக்க கூடாது என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X