வடமதுரை: அய்யலுாரில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.அய்யலுார் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வர். 32வது ஆண்டாக நேற்று 4000க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று மாலை இரவு களர்பட்டி ஆதிபராசக்தி கோயிலில் வழிபாடு செய்த பின்னர் அலங்கரித்த தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர்.இவர்களுக்கு உதவியாக ஆயிரம் பேர் என ஒரே குழுவாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமயபுரத்திற்கு சென்றனர். பிப்.21ல் சமயபுரத்தில் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE