திண்டுக்கல் - திண்டுக்கல்லில் தேசிய திறந்த நிலைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் கீழ் தேசிய திறந்த நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சேர 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார், சாதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், புகைப்படத்துடன் காந்தி கிராமத்தில் உள்ள என்.ஐ.ஓ.எஸ்., அலுவலகத்தில் அட்மிஷனை பதிவு செய்யலாம்.ஆன்லைன் மூலமாக மட்டுமே பணம் செலுத்தலாம். அதனால் ஏ.டி.எம்., கார்டை எடுத்து வர வேண்டும். வேலைக்கு செல்லும் இருபாலரும், இல்லத்தரசிகள், தொழிற்சாலையில் பணிபுரிவோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் போனவர்களும் சேரலாம். விபரங்களுக்கு 0451-245 2372ல் பேசலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE