ஒட்டன்சத்திரம் - ஒட்டன்சத்திரம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் விளம்பரம் செய்வதற்கு சுவர்களில் அரசியல் கட்சிகள் ரிசர்வ் செய்து வருகின்றன.ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே மக்கள் கிராமசபை கூட்டம், பிரசார கூட்டங்களை தி.மு.க., நடத்தி வருகிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரத்தின்போது, தொகுதி வேட்பாளர் சக்கரபாணிதான் என்பதை உறுதிப்படுத்தினார். இதனால் தி.மு.க., வினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.அ.தி.மு.க.,விலும் தேர்தல் பணிகள் வேகம் பிடித்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அ.தி.மு.க., வேட்பாளராகும் வாய்ப்புள்ள ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மாற்று கட்சியினரை தங்களது கட்சிக்கு இழுப்பதும் தீவிரமாக நடக்கிறது. தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் யுக்தி குறித்து பேசி வருகின்றனர்.எல்லாவற்றுக்கும் மேலாக கிராமங்களில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வதற்கு 'ரிசர்வ்' செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE