திண்டுக்கல்- ; மத்திய அரசின் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் கல்வி பயில திண்டுக்கல் மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அனைவரும் அடிப்படை கல்வி பெறும் நோக்கில், மத்திய அரசு 'கற்போம் எழுதுவோம்' திட்டம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு கல்வி வட்டாரத்திலும் 15 வயதிற்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 561 மையங்களில் 11,205 பேருக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும்பாலானோர் 100 நாள் வேலை, வீட்டு வேலை, கூலி வேலை செய்பவர்களே.இவர்களுக்கான கற்பித்தல் நேரம், அருகில் உள்ள துவக்க, நடுநிலைப் பள்ளி வேலை நாட்களில் தினமும் 2 மணி நேரமாக ஒதுக்கப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. எழுத, படிக்க தெரியாத பலரும் கையெழுத்து போடவும், கூட்டல், கழித்தல் கணக்குகளையும் நன்கு கற்றுள்ளனர். இவர்களுக்கென தனி பாடத்திட்டம் தயாரித்து புத்தகமும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வயது வந்த இருபாலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.* கையெழுத்து போடுவேன்இ.கவிதா 40, கூலித் தொழிலாளி, திண்டுக்கல்: மழைக்கு ஒதுங்குவதற்கு கூட பள்ளிக்கு சென்றதில்லை. படிப்பறிவு இல்லாததால் மற்றவர்களை போல் எழுத, படிக்க கையெழுத்து போட முடியவில்லையே என வருத்தப்பட்டு இருக்கிறேன். இப்போது என்னால் கையெழுத்து போட முடியும். வங்கிக்கு சென்றால் யாருடைய உதவியுமின்றி பணம் எடுக்கவும், செலுத்தவும் தெரியும். எழுதப் படிக்க பழகியதால் என்னைவிட குழந்தைகள், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கணக்கு போட தெரியும்ஆர்.பத்மாவதி 34, இல்லத்தரசி, திண்டுக்கல்:படிக்காததால் கூட்டல், கழித்தலில் தவறு செய்தேன். அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு கூட பிறரின் உதவி தேவைப்பட்டது. இத்திட்டத்தால் தற்போது நானும் எழுதப் படிக்க கற்றுக் கொண்டேன். இனி பிழையின்றி கணக்கு போடுவேன். இந்த வயதில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்ததால் வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் வருகிறேன். உயிர், மெய் எழுத்துக்கள், இரண்டாம் வாய்ப்பாடு வரை நன்றாக தெரியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE