திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தர்பூசணி சீசன் களை கட்ட துவங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.20 க்கு விற்பனையாகிறது.மாவட்டத்தில் 2020 நவம்பர் முதல் கடும் பனிப்பொழிவு நீடித்தது. மாலை 6:00 மணி முதல் காலை 9:00 மணி வரை குளிர் வாட்டியது. கடந்த 2 நாட்களாக நிலைமை மாறி, பனியின் தாக்கம் குறைந்துள்ளது. மதியம் வெயில் கொளுத்துகிறது. வெப்பத்தை தணிக்கும் விதமாக, திருச்சி ரோடு, பழநி ரோடு, தாடிக்கொம்பு ரோட்டில் தர்பூசணி விற்பனை களை கட்ட துவங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.20 க்கும், ஒரு துண்டு ரூ.10 க்கும் விற்பனையாகிறது.வியாபாரி சுப்பையா கூறுகையில், ''தொடர் மழையால் இந்தாண்டு தர்பூசணி சாகுபடி பாதித்துள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வரத்தும் குறைந்துள்ளது. தற்போது திண்டிவனம், மடத்துக்குளம் பகுதியில் இருந்து அதிகம் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரித்தால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE