பொது செய்தி

தமிழ்நாடு

நத்தம் மாரியம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.கடந்த பிப்.15 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர். விழாவின் 5 வது நாளான நேற்று காலை பக்தர்கள் மேளதாளம் முழங்க அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். மாலை அம்மன்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.கடந்த பிப்.15 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து, காப்பு கட்டி விரதம் துவங்கினர். விழாவின் 5 வது நாளான நேற்று காலை பக்தர்கள் மேளதாளம் முழங்க அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். மாலை அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு முக்கிய வீதிகளில் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார்.மார்ச் 1 அன்று மஞ்சள் பாவாடை எடுத்தல், அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 2 அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கழுமர ஏற்றம், பூக்குழி இறங்குதல் நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X