திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி தேர்வு முகாம் பிப்.22 ல் காலை 9:00 மணிக்கு நடக்க உள்ளது.நிலக்கோட்டை, சாணார்பட்டி, பழநி, வேடசந்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் முகாமில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற இருபாலரும் பங்கேற்கலாம். கல்வி சான்று, ரேஷன் கார்டு, ஆதார், சுய விவர குறிப்பு அசல் மற்றும் நகல், புகைப்படத்துடன் நேரில் வரவும். தீன் தயாள் உபாத்யா திட்டத்தில் உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், கணக்கியல் உதவியாளர், ஆட்டோ மொபைல் சர்வீஸ், அழகு கலைப்பயிற்சி, சிசிடிவி கேமரா பொருத்துதல், வெல்டிங், சோலார் பேனல் பொருத்துதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE