உடுமலை:உடுமலையில், போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,), திருப்பூர் மண்டல மாநாடு நடந்தது. தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் பேசினார்.இதில், மோட்டார் வாகன சட்ட விதிகளில், கூடுதலாக இணைத்துள்ளசட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும், 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தப்படி இன்சென்டிவ், கலெக்சன் உள்ளிட்ட அலவன்ஸ்களைவழங்க வேண்டும்.ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்து, பணிமனை ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்கள்வழங்கவேண்டும். சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, தொழிலாளர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் ஜான்சன் கென்னடி, மண்டல பொதுச்செயலாளர் செல்லதுரை, பொருளாளர் சுப்ரமணி, துணைபொதுச்செயலாளர் விஸ்வநாதன், சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் உன்னி கிருஷ்ணன், துணைச்செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE