வத்தலக்குண்டு - போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்தி, மேற்கு வங்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சேர்ந்த ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மதாய்பால். இவர் சிலிகுரியில் இருந்து 5 ஆயிரம் கி.மீ., க்கு மேல் பயணித்து விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மதித்து உயிர் பலியை குறைக்க வலியுறுத்தி கொடைக்கானலுக்கு பயணிக்கிறார்.வழியில் வத்தலக்குண்டில் அவர் நம்மிடம் கூறியதாவது: எங்கள் மாநிலத்திற்குள் இதே போன்று சிறிய அளவில் பயணம் செய்துள்ளேன். இது என் முதல் தொலைதுார சைக்கிள் பயணம். கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா மையம் என்பதால் இங்கு வருவதை நோக்கமாகக் கொண்டேன். கடந்த டிச. 15ல் பயணத்தை துவங்கி ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தேன். மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் நடந்து வந்தாலும் எனக்கு அரசியல் ஆர்வமில்லாததால் அது குறித்து தெரியவில்லை'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE