கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் படகில் பட்டாசு கொளுத்திய சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பிப்.15ல் கொடைக்கானலில் தனியார் விடுதியில் நடந்த திருமண நிகழ்வுக்காக ஏரியில் இரு படகுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அதில் அலங்காரம் செய்து எலக்ட்ரானிக் ரிமோட் மூலம் இயங்கும் பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் விசாரணைக்கு உத்தரவிட்டார். சுற்றுலா வளர்ச்சி கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர் விசாரணை செய்து இரு படகு ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்தார். மேலும் திருமண நிகழ்வை ஏற்பாடு செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த கோவை டேனியல் ராஜா 57, மீது படகு குழாம் மேலாளர் பூபாலன் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார்.போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE