திருப்பூர்:திருப்பூரில், மேலும், இரண்டு புதிய கோர்ட்கள், வரும் 22ம் தேதி, துவங்கப்படுகின்றன.மாவட்ட முதன்மை செஷன்ஸ், கூடுதல் மாவட்டம், மகிளா, குடும்ப நலம், ஜே.எம்., கோர்ட்கள் உட்பட, திருப்பூர், பல்லடம் ரோட்டில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் செயல்படுகிறது. வரும் 22ம் தேதி(நாளை மறுதினம்), மாலை 5:15 மணிக்கு, புதிதாக கூடுதல் மகிளா கோர்ட் ஒன்றும், கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட் ஒன்றும் துவங்கப்படுகின்றன.காணொளியில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி துவக்கி வைக்கிறார். திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதிகளான, ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், ஆஷா பங்கேற்கின்றனர்.ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் ஆறு பணியிடம் உட்பட, மாவட்டத்தில், மொத்தம், 13 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாக துவங்கப்பட உள்ள கோர்ட்களுக்கு, புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவரா, வேறு கோர்ட் நீதிபதிகள் பொறுப்பு வகிப்பரா என்பது, இன்னும் தெரியவில்லை.நீதிபதி மற்றும் கோர்ட் ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE