ஸ்டாலின் பொதுக்கூட்டம்: மரங்கள் வெட்டி சாய்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பொதுக்கூட்டம்: மரங்கள் வெட்டி சாய்ப்பு

Added : பிப் 20, 2021
Share
திருப்பூர்:திருப்பூரில், ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியின்போது, இரண்டு மரங்களை, தி.மு.க.,வினர் வெட்டி சாய்த்துள்ளனர்.திருப்பூரில், தி.மு.க., தலைவர் நாளை (21ம் தேதி), தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுாரில், 70 ஏக்கர் தனியார் நிலத்தில், பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி, கடந்த
 ஸ்டாலின் பொதுக்கூட்டம்: மரங்கள் வெட்டி சாய்ப்பு

திருப்பூர்:திருப்பூரில், ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியின்போது, இரண்டு மரங்களை, தி.மு.க.,வினர் வெட்டி சாய்த்துள்ளனர்.திருப்பூரில், தி.மு.க., தலைவர் நாளை (21ம் தேதி), தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுாரில், 70 ஏக்கர் தனியார் நிலத்தில், பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி, கடந்த இரு நாட்களாக நடந்து வருகிறது.மேடைக்கு செல்லும் நுழைவாயில் அருகே, வரவேற்பு தோரணம் அமைக்க, அங்குள்ள நன்கு வளர்ந்த இரு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெறப்படவில்லை.பிரசாரத்துக்கு ஸ்டாலின் மற்றும் கட்சியினர் வரும் வழியெங்கும் கட்சிக் கொடி மற்றும் பேனர்கள் அமைக்கும் பணி நடக்கிறது. காங்கயம் ரோட்டில் குறுகலான இடங்களில் ரோட்டோரம் மூங்கில் கம்பு நட்டும், மின் கம்பங்களை ஒட்டியும், சில இடங்களில் போக்குவரத்து எச்சரிக்கை பலகையிலும் கட்சி பேனர்கள் கட்டப்பட்டுள்ளன.இவை, போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளன. தி.மு.க.,வினரின், இச்செயல், பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X