புதுச்சேரி:ஆபாச படங்களை வெளியிடுவதாக, கல்லுாரி மாணவியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், திருபுவனையைச் சேர்ந்த, 20 வயது பெண், அரசுக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரைச் சேர்ந்த கார்த்திக், 24, என்பவருடன், 'பேஸ்புக்' மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை, கார்த்திக் காதல் வலையில் வீழ்த்தினார்.
காதலி குளிக்கும் போதும், வீட்டில் தனிமையில் இருக்கும் போதும், ஆபாசமாக படம் எடுத்து அனுப்புமாறு கார்த்திக் கேட்டு உள்ளார். காதல் போதையில், மாணவியும், தன் அந்தரங்க படங்களை எடுத்து அனுப்பினார்.ஆபாச படங்கள் கிடைத்ததும் கார்த்திக், சுயரூபத்தை காட்டினார்.
மாணவியிடம், 'ஆசைக்கு இணங்க வேண்டும். கேட்கும்போது பணம் தர வேண்டும். இல்லையெனில், ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டியுள்ளார். பயந்த மாணவி, பல முறை பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, கார்த்திக் கேட்ட பணத்தை அனுப்ப முடியாமல், தன் தந்தையிடம் கூறினார்.
தந்தை புகார்படி, திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக்கை சென்னையில் கைது செய்தனர்.விசாரணையில், கார்த்திக், 'பேஸ்புக்' மூலம், 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவியரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆபாச படம் எடுத்து மிரட்டிப் பணம் பறித்தது தெரிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE