கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ஊட்டி:கூடலுாரில், பெற்ற மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த, 44 வயது நபருக்கு, 11 வயதில் மகள் உள்ளார். மனைவி இல்லாத நேரத்தில், தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 'தாய் மற்றும் உறவினர்களிடம் கூறினால், கொன்று விடுவேன்' என,

ஊட்டி:கூடலுாரில், பெற்ற மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.நீலகிரி மாவட்டம், கூடலுார் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த, 44 வயது நபருக்கு, 11 வயதில் மகள் உள்ளார். மனைவி இல்லாத நேரத்தில், தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 'தாய் மற்றும் உறவினர்களிடம் கூறினால், கொன்று விடுவேன்' என, மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.இந்நிலையில், தாத்தா வீட்டுக்கு சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். உடலில் காயங்கள் இருப்பதும், பல முறை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்தது.இது குறித்து உறவினர்கள், 2017 செப்., 21ல், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.விசாரணைக்கு பின், அந்த நபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு, ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.நேற்று நடந்த இறுதி விசாரணையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அருணாச்சலம் தீர்ப்பளித்தார்.இந்த வழக்கில், அரசு வக்கீல் மாலினி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X