கிளப்புறாங்கய்யா... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிளப்புறாங்கய்யா... 

Added : பிப் 20, 2021
Share
பூனையின் சாதனைஆஸ்திரேலியாவை சேர்ந்த அனிகாமோரிட்ஸ் என்ற பெண், தனது 11 வயதில் இருந்து பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். சிறு வயதில் இருந்தே, பூனையோடு அதிக நேரம் செலவிடுவதால், பூனையும் அப்பெண் சொல்வதை கேட்டு புரிந்து நடந்து கொள்ளும். இந்நிலையில், அனிகாவின் சொல் பேச்சை கேட்டு, ஹைபை கொடுப்பது, மணி அடிப்பது, பெயரை வைத்த பொருட்களை சரியாக கண்டுபிடிப்பது, உள்ளிட்ட 26
 கிளப்புறாங்கய்யா... 

பூனையின் சாதனைஆஸ்திரேலியாவை சேர்ந்த அனிகாமோரிட்ஸ் என்ற பெண், தனது 11 வயதில் இருந்து பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். சிறு வயதில் இருந்தே, பூனையோடு அதிக நேரம் செலவிடுவதால், பூனையும் அப்பெண் சொல்வதை கேட்டு புரிந்து நடந்து கொள்ளும். இந்நிலையில், அனிகாவின் சொல் பேச்சை கேட்டு, ஹைபை கொடுப்பது, மணி அடிப்பது, பெயரை வைத்த பொருட்களை சரியாக கண்டுபிடிப்பது, உள்ளிட்ட 26 செயல்களை ஒரு நிமிடத்தில் செய்து பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.சிரிக்கும் புலிக்குட்டிரஷ்யாவின், பர்னால் விலங்கியல் பூங்காவில் சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், எட்டு மாதங்களான புலிக்குட்டி ஒன்று தற்போது உறுமலுக்கு பழகிக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த புலிக்குட்டி உறுமும்போது, சிரிப்பது போன்றும், பறவை கத்துவது போலவும் இருப்பதை கண்டு, சுற்றுலா பயணிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்நிலையில், விசித்திரமான இந்த புலிக்குட்டியின் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வலையில் சிக்கிய பாம்புநாகபாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியிருப்பதை கண்டு, குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். பாம்பு பிடிப்பவர் வந்து அதை மீட்டார். பின்னர், ஆய்வு செய்தபோது, பாம்பின் உடலை வலை நன்கு இறுக்கியிருப்பது தெரியவந்தது. முதல் கட்டமாக, சோர்வாக இருந்த பாம்புக்கு, குடிப்பதற்காக நீர் கொடுக்கப்பட்டது. பின்னர், வலை அப்புறப்படுத்தப்பட்டு, பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X