உடுமலை:''பொது போக்குவரத்தை மேம்படுத்துவது, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சு முடிவு எட்டப்படாவிட்டால், வரும் 23ம் தேதி முதல் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர்,'' என, தொழிற்சங்க மாநிலச்செயலாளர் ஆறுமுக நயினார் தெரிவித்தார்.உடுமலையில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுக்கு முன், நாள் ஒன்றுக்கு, 2.10 கோடி பேர் பயணம் செய்தனர். தற்போது, 1.06 கோடி பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.போக்குவரத்துக்கழகங்களுக்குஉரிய நிதியை அரசு வழங்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் வேண்டும். அரசு நிதி ஒதுக்காததால், தொழிலாளர்களின் நிதி, 7,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பயன் என அனைத்தையும் வழங்க வேண்டும்.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, ஆறு ஆண்டாக இழுபறியாகிறது. வரும், 23ல், அமைச்சருடன் பேச்சு நடக்கிறது. இதில், தீர்வு காணாவிட்டால், 23 முதல், போக்குவரத்து கழக ஊழியர் காலவரையற்ற போராட்டம் துவங்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE