சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4,200 தரமற்ற முட்டைகள் பறிமுதல்: வியாபாரி மீது பாய்ந்தது வழக்கு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திருப்பூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, 4,200 தரமற்ற முட்டைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், திருப்பூரில், துரித உணவு கடையில், சிற்றுண்டி வாங்கி சாப்பிட்ட, இரண்டு குழந்தைகள் பலியாகினர். இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்
 4,200 தரமற்ற முட்டைகள் பறிமுதல்: வியாபாரி மீது பாய்ந்தது வழக்கு

திருப்பூர்:நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, திருப்பூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, 4,200 தரமற்ற முட்டைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சமீபத்தில், திருப்பூரில், துரித உணவு கடையில், சிற்றுண்டி வாங்கி சாப்பிட்ட, இரண்டு குழந்தைகள் பலியாகினர். இதை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதா தலைமையிலான குழுவினர், மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில், பண்ணைகளில் இருந்து கழிக்கப்படும் உடைந்த முட்டைகள், துரித உணவு, தள்ளுவண்டி கடைகள் மற்றும் சிறு ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.அவிநாசி ரோடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, உணவு பாதுகாப்பு துறையினர், முட்டை ஏற்றிவந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, பயன்படுத்த தகுதியில்லாத, உடைந்த முட்டைகளை கொண்டு செல்வது தெரியவந்தது.முட்டை வியாபாரி சந்திரசேகரிடம் விசாரித்தபோது, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் பகுதியில் உள்ள, பண்ணைகளில் இருந்து முட்டைகளை வாங்கி வந்தது தெரியவந்தது. தரமில்லாத, 4,200 முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை குப்பைக்கிடங்கு அருகே குழி தோண்டி புதைத்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'துரித உணவு கடைகளில் பயன்படுத்தும், முட்டை, இறைச்சி, எண்ணெய் குறித்து தீவிர ஆய்வு நடத்தி வருகிறோம். தினமும் இதுபோன்ற தரமில்லாத முட்டைகள், திருப்பூருக்கு எடுத்து வந்து விற்கப்படுகின்றன. தரமற்ற முட்டைகளை கொண்டுவந்த வியாபாரி மீது, உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் -2006ன் படி வழக்கு பதிந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X