கோவை:பல்வேறு காரணங்களுக்காக பயணிகளின் 'யூசர் ஐ.டி.,யை ஐ.ஆர்.சி.டி.சி., மறுபரிசீலனை செய்துவருகிறது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக(ஐ.ஆர்.சி.டி.சி.,) இணையதளத்தில் தினமும் லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து ரயில்களில் பயணிக்கின்றனர். இதற்கென, www.irctc.co.in என்ற இணையதளத்தில், மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களுடன் பயணிகளின், 'யூசர் ஐ.டி.,' உருவாக்கப்படுகிறது.இந்நிலையில், முறைகேடுகளை தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக தற்போது, 'யூசர் ஐ.டி.,' மறுபரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. எனவே, பயணிகள்தங்கள் மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட தகவல்களை புதுப்பிக்கவும், ஒரு முறை கடவு சொல் பயன்படுத்தி சரிபார்க்கவும், ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE