கோவை:ஒடிசாவை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக், காணொளி வாயிலாக கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே மஞ்சகண்டி வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்து, சதி திட்டம் தீட்டினர். அவர்களை பிடிக்க, 'தண்டர் போல்ட்' போலீசார் சென்றபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுகொல்லப்பட்டனர்.தப்பிய சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தீபக்,32, ஆனைகட்டியில் மலைப்பகுதியில் பதுங்கியிருந்தபோது, 2019, நவ., 9ல் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூனில், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.ஒடிசாவில், அதிரடிப்படை போலீசாரை கொன்ற வழக்கில், பி.டி., வாரன்டில்கைது செய்யப்பட்ட தீபக், அம்மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவையில், தீபக் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஒடிசா மாநில சிறையில் இருந்து காணொளி வாயிலாக நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 18க்கு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE