சென்னை:தமிழகம் முழுதும், வெவ்வேறு இடங்களில், சாலை விபத்து, நீரில் மூழ்கல், தேனீக்கள் கொட்டியது உள்ளிட்ட பல சம்பவங்களில், 25 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.தாய்மொழி தின கருத்தரங்கம்சென்னை:
தமிழக திறந்தநிலை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த, 2000ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் நாளை, உலக தாய்மொழி நாளாக, யுனெஸ்கோ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்., 21ல் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான தாய்மொழி தினம், நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழக திறந்தநிலை பல்கலை தமிழியல் மற்றும் பண்பாட்டு புலத்தின் சார்பில், தாய்மொழி தின கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.கருத்தரங்கில், 'ஆன்லைன்' வழியே வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள், மாணவ - மாணவியர், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE