கோவை:கோவையில் கடந்த மூன்று நாட்களாக தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் நேற்று தலைமையகத்துக்கு புறப்பட்டு சென்றார்.ஆர்.எஸ்.எஸ்., அகில பாரத தலைவர் மோகன் பாகவத் பிப்., 17ல் கோவை வந்தார். வடவள்ளி ஆர்.எஸ்.எஸ்.முக்கிய பிரமுகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அன்று மாலை ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் எழுதிய, 'மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை ' புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.பிப்., 18 காலை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ரீதியான முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசினார், மாலை 6:00 மணிக்கு கொடிசியா அரங்கில், கோவையில் தொழில், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து பேசினார்.நேற்று அதிகாலை விமானத்தில் நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் சென்றார். ஆர்.எஸ்.எஸ். தென்பாரத தலைவர் வன்னியராஜன், தென் தமிழக தலைவர் ஆடலரசன், கோவை கோட்டத்தலைவர் சுகுமார் உள்ளிட்டோர், நன்றி தெரிவித்து வழியனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE