அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றும் தி.மு.க., பா.ஜ., செயலர் புகார்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:''திராவிடம் என சொல்லி, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்க எண்ணிக்கையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செல்வர். ஊழலும், ஹிந்து கடவுளை அவமதிப்பதும் தான், தி.மு.க., தலைவர்

தஞ்சாவூர்:''திராவிடம் என சொல்லி, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது,'' என, பா.ஜ., தேசிய பொதுச் செயலரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழக சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்க எண்ணிக்கையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை செல்வர். ஊழலும், ஹிந்து கடவுளை அவமதிப்பதும் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் திராவிட கலாசாரமா?திராவிடம் என கூறி, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. அவர்களுக்கு பாடம் கற்பிக்க, இது தான் சரியான நேரம்.

பெட்ரோல், டீசல், 87 சதவீதம் இறக்குமதி செய்வதால், விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பிரதமர் மோடி, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உற்பத்தி செய்ய, திட்டம் வகுத்து வருகிறார்.

பழனிசாமி., - பன்னீர்செல்வம்., இருவரும் அ.தி.மு.க.,வில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு சசிகலாவின் பலம், பலவீனம் தெரியும். அது, அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்கள் பார்த்துக் கொள்வர். கூட்டணியில், யாரை சேர்த்துக் கொள்வது என்பதை, அ.தி.மு.க., முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X