கருணாநிதி சிலை அமைக்க வ.உசி., பேத்தி எதிர்ப்பு

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி;பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து, போட்டியாக சொந்தமாக கப்பல் வணிகம் நடத்தியதால், 'கப்பலோட்டிய தமிழன்' என்றும், அதற்காக சிறை தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்ததால், 'செக்கிழுத்த செம்மல்' என்றும் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார்.அவரின் நினைவை போற்றும் விதமாக, மதுரை சிம்மக்கல்லில், அவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலைக்கு அருகில், மறைந்த
 கருணாநிதி சிலை அமைக்க வ.உசி., பேத்தி எதிர்ப்பு

பொள்ளாச்சி;பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து, போட்டியாக சொந்தமாக கப்பல் வணிகம் நடத்தியதால், 'கப்பலோட்டிய தமிழன்' என்றும், அதற்காக சிறை தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்ததால், 'செக்கிழுத்த செம்மல்' என்றும் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார்.அவரின் நினைவை போற்றும் விதமாக, மதுரை சிம்மக்கல்லில், அவரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலைக்கு அருகில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உருவச்சிலை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கு அனுமதிக்கக் கூடாது என, பொள்ளாச்சியில் வசிக்கும், வ.உ.சி.,யின் பேத்தி மரகத மீனாட்சி, கோவை வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் மனு அளித்துள்ளார்.மனுவில், 'நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி, தனது முழு வாழ்வையும் தியாகம் செய்தவர் வ.உ.சிதம்பரனார். அவரது சிலைக்கு அருகே, ஒரு அரசியல் தலைவரின் சிலையை அமைப்பது, அவரது புகழுக்கும், தியாகத்துக்கும் களங்கம் விளைவிப்பதாக அமையும். மேலும், இதை தவறான முன்னுதாரணமாக கொண்டு, மற்ற தியாகிகள் சிலைகளின் அருகில், அரசியல் தலைவர்களுக்கு சிலை அமைக்கும் சூழல் ஏற்படும்.எனவே, அப்பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கக் கூடாது' என,கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-பிப்-202112:04:41 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தியாகியின் சிலை அருகில் ஊழலின் ஊற்றுக்கண் சிலை இருக்கக் கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X