எஸ்.சி., பிரிவில் வெளியேற்ற தயக்கம் ஏன்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எஸ்.சி., பிரிவில் வெளியேற்ற தயக்கம் ஏன்?

Added : பிப் 20, 2021
Share
மதுரை:''பட்டியல் இனத்தில் இருந்து, தேவேந்திர குல வேளாளரை வெளியேற்ற, மத்திய பா.ஜ., அரசு தயங்குவது ஏன்,'' என, புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.மதுரையில் அவர் கூறியதாவது:பிப்., 13ல், ஆறு உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்ற திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. கோரிக்கையில் பாதியை தான், மத்திய அரசு
 'எஸ்.சி., பிரிவில் வெளியேற்ற தயக்கம் ஏன்?

மதுரை:''பட்டியல் இனத்தில் இருந்து, தேவேந்திர குல வேளாளரை வெளியேற்ற, மத்திய பா.ஜ., அரசு தயங்குவது ஏன்,'' என, புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

மதுரையில் அவர் கூறியதாவது:பிப்., 13ல், ஆறு உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்ற திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. கோரிக்கையில் பாதியை தான், மத்திய அரசு நிறைவேற்றி யுள்ளது. அத்துடன் பட்டியல் இனத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும்.

மத்திய அரசு நடவடிக்கை, இடிந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போல இருக்கிறது. மத்திய அரசு நடவடிக்கையை வரவேற்கும் சில தனி நபர்கள், தேவேந்திர குல வேளாளர் மக்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள்.பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றாவிடில், இச்சமூக ஆதரவு, மத்திய அரசுக்கு கிடைக்காது. கோவைக்கு பிப்., 25ல் வரும் பிரதமர் மோடியிடம் இதை வலியுறுத்த உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X