ஆரணி:திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுச் சேலையை, கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வடிவமைத்து உள்ளனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதற்காக, ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மற்றும் டிசைனர் இணைந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைத்தறி பட்டுச் சேலையை வடிவமைத்துள்ளனர்.
இந்த சேலையின் மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய். பட்டுச் சேலையை, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE