அரசியல் செய்தி

தமிழ்நாடு

2 'சீட்' கேட்கும் ஹிந்து முன்னணி

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க.,விடம், பா.ஜ., 40 - 45 சீட்கள் வரை எதிர்பார்ப்பதாகவும், அ.தி.மு.க., அதிகபட்சமாக, 20 - 23 தான் தரமுடியுமென்று கூறி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. எத்தனை சீட் கிடைத்தாலும், கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளை வாங்குவதற்கு பா.ஜ., திட்டமிட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்கள், அ.தி.மு.க., வின் கோட்டையாக

தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அ.தி.மு.க.,விடம், பா.ஜ., 40 - 45 சீட்கள் வரை எதிர்பார்ப்பதாகவும், அ.தி.மு.க., அதிகபட்சமாக, 20 - 23 தான் தரமுடியுமென்று கூறி வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

எத்தனை சீட் கிடைத்தாலும், கொங்கு மண்டலத்தில் அதிகமான தொகுதிகளை வாங்குவதற்கு பா.ஜ., திட்டமிட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்கள், அ.தி.மு.க., வின் கோட்டையாக இருப்பதுடன், அந்தப் பகுதிகளில் பா.ஜ.,வும், ஹிந்து அமைப்புகளும் சற்று பலமாக இருப்பதால், இந்த மாவட்டங்களில் எவ்வளவு சீட் வாங்கினாலும், வென்று விடலாம் என, பா.ஜ., நிர்வாகிகள் நம்புகின்றனர்.
பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழகத்தில் எங்களுக்கு எத்தனை சீட் கிடைத்தாலும், ஹிந்து முன்னணிக்கு இரண்டு சீட் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் தொகுதியும், குமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியும் கேட்கின்றனர்.'பல்லடத்தில் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன் தங்கராஜ் நிற்பதாகச் சொல்கின்றனர். அந்தத் தொகுதி கிடைப்பதற்கும் நிறையவே வாய்ப்புள்ளது' என்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-பிப்-202106:58:32 IST Report Abuse
Bhaskaran ... eththanai seet koduthaalum athanayilum thimuka sweep
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
20-பிப்-202106:53:13 IST Report Abuse
Raman ஹி ஹி ஹி. நடக்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X