காங்கேயம்:துணை சபாநாயகர் ஜெயராமன், 10 நிமிட பேச்சில், எட்டு நிமிடங்கள் முதல்வர் புகழ் பாடினார்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில் துணை சபாநாயகர் ஜெயராமன், ௧௦ நிமிடங்கள் பேசினார். அதில் எட்டு நிமிடம், முதல்வர் புகழ் பாடினார்.அவர் புகழ் மாலையில் சில பூக்கள்:முதல்வர் இ.பி.எஸ்., நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பவர். காரில் போகும்போது, தெருமுனையில் நான்கு பேர் நின்று ஒரு காகிதத்தை காட்டினால், காரை நிறுத்தி, விபரம் கேட்டு நிறைவேற்றுவார். இதை, அ.தி.மு.க.,வினர் சொல்லவில்லை; தி.மு.க.,வினரே மனம் திறந்து பாராட்டுகின்றனர்.சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவில் எந்த மாநிலத்திலும், ஒரே ஆண்டில், 11 மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்ட வரலாறு கிடையாது. அந்த வரலாற்றை படைத்தவர் நம் முதல்வர்.காங்கேயம் அ.தி.மு.க., நிர்வாகிகள், விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கேட்டு நச்சரித்தனர். எனக்கே கோபம் வந்திருக்கும். ஆனால், முதல்வரோ, பார்க்கலாம், பார்க்கலாம் என்றவர், மறுநாளே அறிவிப்பு செய்து விட்டார்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE