ராமநாதபுரம்:பிப்.26ல் நடிகர் ரஜினியின் திருமண நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களநாயகி கோயிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் லட்சார்ச்சனை, பத்தாயிரம் தீபங்கள் ஏற்றி நேற்று வழிபாடு நடத்தப்பட்டது.
மும்மத வழிபாடாக ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். முதல் நாளான நேற்று காலை மங்களநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனையில் பங்கேற்க ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் கெய்க்வாட், அவரது மகன் சந்திரகாந்த் வந்தனர். மங்களநாதர், மங்களநாயகி, மரகத நடராஜர் சன்னதிகளில் வழிபட்டனர்.
சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியன் தலைமையில் துவங்கிய லட்சார்ச்சனை இரவு 8:00 மணி வரை நடந்தது. மாலையில் கோயில் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது.சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: இந்த பூஜை செய்வதால் உடல் நலம் பெறும். எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கவும், வெற்றி கிட்டவும் நடத்தப்படுகிறது, என்றார்.
ரசிகர் மன்றத்தை சேர்ந்த ராமநாதபுரம் பாலநமசிவாயம், மதுரை குமரவேல், கோவை சண்முகம் பங்கேற்றனர்.ஏர்வாடி தர்காஇன்று(பிப்.20) காலை 10:00 மணிக்கு ஏர்வாடி தர்காவில் சிறப்பு வழிபாடு, நாளை ஓரியூர் புனித அருளானந்தர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.நிருபர்கள் பேட்டியளிக்க கோரியபோது சத்தியநாராயணா மறுத்துவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE