அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேச்சுரிமைக்கு போலீஸ் தடை கொந்தளிக்கும் இப்ராஹிம்-

Added : பிப் 20, 2021
Share
Advertisement
'தமிழகத்தில் பேச்சுரிமைக்கு, போலீஸ் தடை போடுகிறது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர், வேலுார் இப்ராஹிம் கூறினார்.ராமநாதபுரம், மண்டபம் பகுதியில், பா.ஜ.,வின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம், போலீஸ் கெடுபிடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, இப்ராஹிம் கூறியதாவது:முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று, நேற்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்

'தமிழகத்தில் பேச்சுரிமைக்கு, போலீஸ் தடை போடுகிறது,'' என, தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர், வேலுார் இப்ராஹிம் கூறினார்.ராமநாதபுரம், மண்டபம் பகுதியில், பா.ஜ.,வின் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம், போலீஸ் கெடுபிடிகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, இப்ராஹிம் கூறியதாவது:முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று, நேற்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் இரவே, அங்கு சென்று தங்கியிருந்தேன். மண்டபம் பகுதி, ஏ.எஸ்.பி., தீபக் ஸ்வாஜி, என்னை சந்தித்தார்.'நீங்கள் கூட்டத்தில் பேசக் கூடாது; உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

'எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சியினர், உங்கள் பேச்சை எதிர்க்கின்றனர். 'உங்களை பேச அனுமதித்து, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், காவல் துறையே அதற்கு பொறுப்பு என்கின்றனர். அதனால், நீங்கள் பேசக் கூடாது' எனக் கூறி, எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்தார்.ஏற்கனவே, கோவையிலும் இப்படி தான், ராமர் கோவிலுக்கு, முஸ்லிம் மக்களிடம் நிதி வசூல் செய்யப் போன என்னை கைது செய்து, சேலத்துக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ் நெருக்கடியைத் தொடர்ந்து, பா.ஜ., பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டனர்.பா.ஜ., அரசின் திட்டங்கள், முஸ்லிம்களுக்கு எதிரானவை அல்ல என, நான் பேசுவது, முஸ்லிம்கள் மத்தியில் எடுபடுகிறது என்பதால், என்னை பேசக் கூடாது என, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் முஸ்லிம்கள் திட்டமிட்டு மிரட்டுகின்றனர். இதற்கு, தமிழக அரசும் துணை போகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடவும் முடியவில்லை. அப்படி செய்தால், அது, முதல்வருக்கு எதிராகப் போய் விடும்.

அதனால், பொறியில் மாட்டியது போல சிக்கித் தவிக்கிறோம்.மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்களால், முஸ்லிம்களுக்கு இருக்கும் நன்மைகள் குறித்து பேசப் போன என்னை தடுப்பதால், இழப்பு எனக்கல்ல. முதல்வர் தலைமையேற்று, வழிநடத்தும் கூட்டணிக்கு தான்.'கலவரம் செய்வோம்' என மிரட்டுகிறவர்களை விட்டுவிட்டு, ஆதரவாக செயல்படும் நபர்களை தான் தடுக்கிறது, தமிழக காவல் துறை. இனிமேலாவது, இதை சரி செய்வாரா முதல்வர்? மண்டபம், தமிழகத்தில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறதா?இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X