சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் சிசு கொலை

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மதுரை:உத்தப்பநாயக்கனுாரில், பிறந்த ஏழு நாட்களில் பெண் சிசு மர்மமாக இறந்த வழக்கில், பாட்டியே கொலை செய்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனுார் கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவபிரியங்கா 28, தம்பதி. இவர்களுக்கு, 8 - 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவபிரியங்காவிற்கு, கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிப்., 17
 பெண் சிசு கொலை

மதுரை:உத்தப்பநாயக்கனுாரில், பிறந்த ஏழு நாட்களில் பெண் சிசு மர்மமாக இறந்த வழக்கில், பாட்டியே கொலை செய்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், உத்தப்பநாயக்கனுார் கே.பாறைப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி - சிவபிரியங்கா 28, தம்பதி. இவர்களுக்கு, 8 - 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சிவபிரியங்காவிற்கு, கடந்த வாரம் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிப்., 17 இரவில், குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தை இறந்திருந்தது தெரிந்தது.

குழந்தையின் முகத்தில்நகக்கீறல்கள் இருந்ததால், சந்தேகம் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.குழந்தையின் உடலை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்த போது, மூச்சு திணறடிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

பெற்றோரிடம் விசாரித்ததில், இருவரும்வேலைக்கு சென்று விட்டதால், குழந்தையை சின்னச்சாமியின் தாயார் நாகம்மாள், 55, கவனித்து வந்தது தெரிந்தது.நாகம்மாளை விசாரித்ததில், முதல் இரு பெண் குழந்தைகளும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் குறைபாடுகளுடன் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரம் அடைந்து குழந்தையின் முகத்தில் கையால் அழுத்தி உள்ளார். இதில் குழந்தை மூச்சு திணறி இறந்தது. நாகம்மாளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X