மதுரை:மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்த துாய்மைப் பணியாளரின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி.,விசாரிக்க தாக்கலான வழக்கில், பிரேத பரிசோதனைஅறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றமதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி கதிரவன் தாக்கல் செய்த மனு:எனது தந்தை வேல்முருகன். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தார். பிப்.,17ல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துாக்கில் பிணமாகத் தொங்கினார். உடலை பார்க்க எங்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதிக்கவில்லை.
மதுரை அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்றனர்.தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர். உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வருவாய்த்துறை செயலாளர், உள்துறை செயலாளர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கதிரவன் குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர் ஹேமலதா: ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் பிப்.,23 ல் தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE