வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
வாஷிங்டன்; அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், மார்ச், 9ல், தமிழ் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட உள்ளது.அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வாஷிங்டன் மாகாணத்தில், அதிக அளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். இதை கருத்தில் வைத்து, அவர்களை போற்றும் விதமாக, தமிழ் பாரம்பரிய தினத்தை கொண்டாட, மாகாண கவர்னர் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பு நேற்று

வாஷிங்டன்; அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில், மார்ச், 9ல், தமிழ் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட உள்ளது.



latest tamil news



அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வாஷிங்டன் மாகாணத்தில், அதிக அளவிலான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். இதை கருத்தில் வைத்து, அவர்களை போற்றும் விதமாக, தமிழ் பாரம்பரிய தினத்தை கொண்டாட, மாகாண கவர்னர் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இது குறித்து, வாஷிங்டன் மாகாண கவர்னர் ஜே இன்ஸ்லீ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வாஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மக்கள், 9,000 பேர் வசிக்கின்றனர். அவர்களின் தனித்துவமான பூர்வீக மரபுகளை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் பாரம்பரியத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம்.


latest tamil news


உலகின் மிகப் பழமையான மற்றும் தொன்மையான தமிழ் மொழி, அங்கீகாரம் பெற தகுதியுடையது. தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கனடா நாட்டின் பல பகுதிகளில் கவுரவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், வாஷிங்டன் மாகாணத்தில், தமிழ் மொழியை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இங்கு, மார்ச், 9ம் தேதி, தமிழ் பாரம்பரிய தினமாக கொண்டாடப்படும். அந்த சிறப்பான நாளன்று, மாகாண மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து கொண்டாடவேண்டும் என, வேண்டுகிறேன். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன்,இந்தியா
20-பிப்-202120:37:02 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தமிழ் பாரம்பரிய தினமா ? பாரம்பரியம் என்பதே சமசுகிருதம் ஆச்சே ? அதையும் எங்க தலீவர் குடும்பம் அளிக்கும் அங்கீகாரத்தோட கொண்டாடலாம் தப்பில்லை
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
20-பிப்-202115:58:35 IST Report Abuse
Gnanam வாஷிங்டன் மாகாண கவர்னர் ஜே இன்ஸ்லீ அவர்களுக்கு மிக்க நன்றி, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-பிப்-202114:37:01 IST Report Abuse
Vena Suna இந்த பரந்த மனப்பான்மை இங்கு உள்ளவனுக்கு இல்லையே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X