பயங்கரவாத ஆதரவாளர்கள் மூன்று பேர் காஷ்மீரில் கைது

Added : பிப் 20, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உணவக உரிமையாளர் மகன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத ஆதரவாளர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல உணவகத்தின் உரிமையாளர் மகன் ஆகாஷ் மெஹ்ரா மீது சமீபத்தில் மூன்று பேர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உணவக உரிமையாளர் மகன் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத ஆதரவாளர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல உணவகத்தின் உரிமையாளர் மகன் ஆகாஷ் மெஹ்ரா மீது சமீபத்தில் மூன்று பேர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.தாக்குதலுக்கு 1990 காலகட்டத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்த 'முஸ்லிம் ஜன்பஸ் படை' என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த அமைப்பின் ஆதவாளர்களான நவ்காம் பகுதியைச் சேர்ந்த சுஹைல் அகமதுமிர், ஓவைஸ் மன்சூர் சோபி மற்றும் புல்வாமாவை சேர்ந்த விலாயத் அஜீஸ் மிர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜம்மு - காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தானின் லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகள் செயல்பாட்டில் இல்லாத பழைய பயங்கரவாத அமைப்புகளுக்கு புத்துயிர் அளித்து வருவதாக போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X