சென்னை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 4147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநிலத்தில் உள்ள 256 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 52 ஆயிரத்து 280 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 448 பேருக்கு தொற்று உறுதியானது.அதிகபட்சமாக சென்னையில் 136; கோவையில் 49; செங்கல்பட்டில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரிட்டனில் இருந்து வந்த இரண்டு பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக பிரிட்டனில் இருந்து வந்த 36 பேர்; அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர் என 56 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 11 பேருக்கு உருமாறிய புதிய ரக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1.70 கோடி மாதிரிகள் பரிசோதனையில் எட்டு லட்சத்து 47 ஆயிரத்து 385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய 467 பேர் உட்பட எட்டு லட்சத்து 30 ஆயிரத்து 787 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1623; கோவையில் 407; செங்கல்பட்டில் 374 என 4147 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று ஏழு பேர் உட்பட 12 ஆயிரத்து 451 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE